வியாழன், 2 டிசம்பர், 2010

போராட்ட தேதியை திமுக எப்போது அறிவிக்கும்?


காங்கிரஸ், திமுக, பாஜக கட்சிகளின் மெகா ஊழல்களுக்கு எதிராக டிசம்பர் 5ம் தேதி முதல் 11ம்தேதி வரை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி பிரச்சார இயக்கத்தை நடத்த விருப்பதாக கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார். இத னால் கொந்தளிப்பு அடைந்துள்ள திமுக வின் அதிகாரப்பூர்வமான ஏடான ‘முர சொலி’ முக்கால் பக்க அளவிற்கு பெட்டிச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. கோட நாடு, சிறுதாவூர் ஊழல்களுக்காக எப்போது பிரச்சாரம் நடத்தப் போகிறீர்கள் என்று கேள்வி விடுக்கப்பட்டுள்ளது.

ஊழலில், பொதுவாழ்வு நாசப்படுத்தப்படு கிறது என்று கூறுவது ஒருபக்கம் இருக்கட் டும், கண்ணுக்கு எதிராக உள்ளங்கை நெல் லிக்கனி போல் தெரியும் ஊழல் குறித்து என்ன சொல்கிறீர்கள் என்று முரசொலி கெட்டிக்காரத்தனம் என்று நினைத்துக் கொண்டு கேள்வி எழுப்பியுள்ளது.

இதன் மூலம் ஊழல், பொதுவாழ்வை நாசப்படுத்துவது ஒருபுறம் இருக்கட்டும் என்று ஒத்துக் கொள்கிறது முரசொலி. இது ஒரு அரசியல் கட்சி பிரச்சனை அல்ல. நாட் டின் அடித்தளத்தையே ஊழல் என்கிற கரை யான் அரித்து தின்றுக் கொண்டிருக்கிறது. திமுக தேசிய கட்சி ஆகிவிட்டது என்று அந் தக் கட்சியின் தலைவர் ஒருமுறை பெரு மிதமாக குறிப்பிட்டார்.

திமுக தேசிய கட்சி ஆனதோ, இல் லையோ, ஆனால் ஊழலில் காங்கிரஸ், பாஜ கவோடு போட்டிப்போடும் தகுதி அந்தக் கட்சிக்கு வந்துள்ளது என்பது மட்டும் உண்மை. திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தொடர்புடைய ஸ்பெக்ட்ரம் ஊழல் நாடாளுமன்றத்தையே கடந்த 14 நாட்களாக முடக்கும் அளவுக்கு பரபரப்பான விஷயமாக மாறியுள்ளது. காங்கிரஸ், பாஜகவோடு மாறிமாறி கூட்டணி வைத்து மத்திய ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்து கொண்டதன் மூலம் எந்த கலையை திமுக கற்றுக் கொண்டதோ, இல்லையோ ஆனால் ஊழல் கலையில் மெத்த தேர்ச்சியடைந்துவிட்டது.

வழக்கு விசாரணையை தாமதப்படுத்து வதாக அண்மையில் திமுக இளைஞரணி ஒரு போராட்டத்தை நடத்தியது. ஆனால், ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணையில் காங்கிரஸ், திமுக கூட்டணி அரசு நாளுக் கொரு பல்டி அடித்து உச்சநீதிமன்றத்திடம் குட்டு வாங்கிக் கொண்டிருப்பது குறித்து முர சொலிக்கு கொஞ்சம் கூட உறைத்ததாக தெரியவில்லை.

மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் அரசின் ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீட் டில் நடந்த மெகா ஊழல், கர்நாடகத்தில் பாஜக தலைமையிலான அரசின் முதல்வர் எடியூரப்பா ஒதுக்கிக் கொண்ட மனைகள், சுரங்கக் கொள்ளை போன்றவற்றை எதிர்த்து தேசிய கட்சியாக மாறிவிட்ட திமுக போராட்ட தேதியை எப்போது அறிவிக்கப் போகிறது என்று அறிந்து கொள்ள தமிழக மக்கள் ஆர்வமாக உள்ளனர்.

காவேரிராஜபுரம் நில ஆக்கிரமிப்பு குறித்து போராடிய போது திமுக அரசு சாதிச் சாயம் பூசி அதை எப்படி எதிர்கொண்டது என்பதை நாடறியும். இப்போது ஸ்பெக்ட்ரம் ராசா விஷயத்திலும் அதே ரசவித்தையை திமுக கையாள முயன்றாலும், அது அவர் களுக்கு கைகொடுக்கவில்லை. மார்க்சிஸ்ட் கட்சி திருவள்ளூர் மாவட்டம் பள்ளவாடா ஊராட்சியில் செவ்வாயன்று விதைகள் தூவி நிலமெடுக்கும் போராட்டத்தை நடத்தி யுள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழகத் தில் பெரும்புள்ளிகள் ஆக்கிரமித்துள்ள நிலம் குறித்த விபரத்தை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து தீக்கதிர் நில ஆக்கிரமிப்பு குறித்த ஆதாரப்பூர்வ செய்திகளை வெளி யிட்டு வருகிறது. இந்த நிலங்களையெல்லாம் மீட்டெடுத்து ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியின் அடிப் படையில் மறுவிநியோகம் செய்யுமா? அதற் காக போராட முன்வருமா?

-மதுரை சொக்கன்

கருத்துகள் இல்லை: