வெள்ளி, 3 டிசம்பர், 2010

என்ன கொடுமடா இது?

அதன் பெயர் ஊழல் கண்காணிப்பு ஆணையமாம். ஆனால் அது 2ஜி அலைக் கற்றை ஒதுக்கீடு ஊழல் பற்றி விசாரிக்க முடி யாதென மறுத்துவிட்டதாம். இதனை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் தலைமை வழக் கறிஞர் வாகன் வதி கூச்சமில்லாமல் கூறி யிருக்கிறாராம். என்ன கொடுமடா இது?


எந்த ஊழலை விசாரிப்பது, எந்த ஊழலை விசாரிக்காமல் விடுவது என்ற அதிகாரம் அதற்கு இருக்கிறதா? இருந்து விட்டுப் போகட்டும். ஊழல் மலிந்துவிட்டால் எவ்வளவுதான் விசாரிப்பது, சிலதை விட்டு விட விதிவிலக்கு அளிக்கலாம்.

ஆனால் இப்போது விவகாரம் அது வல்ல. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஒன் றேமுக்கால் லட்சம் கோடி (வாயைப் பிளக் காதீர்கள். விழுங்கியவர் ஜாம் ஜாம் என்று ஊர் சுற்றிவருகிறார். திமுக சார்பில் அவ ருக்கு ஆங்காங்கே வரவேற்பு அளிக்கப்படு வதை முரசொலி படம் போட்டு மகிழ்கிறது) ஒன்றே முக்கால் லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்த போது தொலைத் தகவல் தொடர்புத் துறையின் இணைச் செயலாளராக இருந்த பி.ஜே. தாமஸ்தான் இப்போது ஊழலைக் கண்காணிக்கும் ஆணையத்துக்கே தலை வர்(!?) ஊழல் செய்தவரை உத்தமர்ஆக்கி அந்தப் பதவியில் அமரவைத்த இரண்டு உத் தமர்கள் யாரென்றால் மன்மோகன் சிங்கும், சிதம்பரமும்.

2ஜி அலைக்கற்றை ஊழல் ஒருபக்கம் இருக்கட்டும். இந்தத் தாமஸ் ஏற்கெனவே (1991ஆம் ஆண்டு) கேரள அரசின் உண வுத் துறைச் செயலாளராக இருந்தபோது பாமாயில் இறக்குமதியில் ஊழல் செய்தார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இவரும் கேரள முன்னாள் முதலமைச்சர் கருணாகரனும் மற் றும் 7 பேரும் அந்த மாநிலத்தின் ஊழல் தடுப்பு நீதிமன்றத்திலிருந்து 2003ல் ஜாமீன் பெற்றனர்.

ஊழல் ஒழிப்பு பற்றி மார்தட்டிக் கொள் ளும் காங்கிரஸ் கட்சியின் உம்மன் சாண்டி ஆட்சிக் காலத்தில் வழக்கே திரும்பப் பெறப் பட்டது. ஆனால் மீண்டும் அச்சுதானந்தன் முதல்வரானபின் தாமஸ் மீதான வழக்கு புதுப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் தான் தாமஸை எப்படி ஊழல் தடுப்பு கண் காணிப்பு ஆணையத் தலைவராக மத்திய அரசு நியமித்தது? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்புகிறது.

இத்தனைக்குப் பிறகும் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கும் தாமஸ், .சிதம்பரத்தை சந்தித்து ஆலோசனை நடத்தியிருக்கிறா ராம். தகவல் கசிந்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினால் சிதம்பரம் மவுனம் சாதிக்கிறார். ஊழல் மேல் ஊழல் குற்றச் சாட்டில் சிக்கியுள்ளவர் 2 ஜி அலைக் கற்றை ஊழலை விசாரிக்க ஒப்புக் கொள்ளாமல், பதவியில் ஒப்புக் கொண்டிருக்கப்பார்க்கி றார். இதுதான் காங்கிரசின் ஊழல் ஒழிப்பு லட்சணம்?!

2ஜி அலைக்கற்றை ஊழலில் சிக்கிய .ராசா அமைச்சர் பதவியிலிருந்து ராஜி னாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி கள் கோரிக்கை எழுப்பினர். பதவி விலக வேண்டிய அவசியமே இல்லை என்று திமுக தலைவரும் கூறினார். ராசாவும் கூறி னார். குஞ்சு முற்றி கோழியாகிவிட்டதால் இனி தப்ப முடியாது என்று ஒரு வழியாக ராஜினாமா செய்து விட்டார்.

அமைச்சர் ராஜினாமா செய்ததால் சிபி ஐக்கு என்ன பயன் விளைந்தது என்பதைடைம்ஸ் ஆப் இந்தியாவிளக்கியிருக் கிறது (30.11. 2010 பக். 9) ராசா ராஜினாமா செய்தது. நவம்பர் 14ல். இதன்பிறகு ஒருவார காலத்திற்குள் (நவ.18, 20) தொலைத் தொடர்புத்துறையிலிருந்து முக்கிய ஆவ ணங்களை சிபிஐ கைப்பற்றியது. அமைச்சர் பதவியில் அவர் நீடித்த காலமான 2009 அக் டோபர் 22, 2010, பிப்ரவரி 3 ஆகிய தேதி களில் கிடைத்தவற்றை விட முக்கியமான ஆவணங்கள் நவம்பர் 18 அன்றும் (41 பக்கங்கள்) நவம்பர் 20 அன்றும் (75 பக்கங்கள்) கிடைத்தன.

ஆவண ஆதாரங்கள் கிடைப்பதில் தடைஏற்படும் என்பதால் ராசா ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரப்பட்டது எவ்வளவு சரியானது என்பது புரிந்திருக்கும். இதனால்தான் உச்ச நீதிமன்றமும் இன் னுமா பதவியில் நீடிக்கிறார் அமைச்சர் என்று கேள்வி கேட்டது.

அதுமட்டுமல்ல; முறையற்ற உரிமங்கள் பெற்ற 85 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் இந்தத்துறைக்கான புதிய அமைச்சர் கபில் சிபல். ராசா நீடித்தி ருந்தால் அனுப்பியிருப்பாரா? அதற்காகக் கபில்சிபல் புனிதராகிவிடவில்லை.

ஒருபக்கம் நோட்டீஸ் அனுப்பிக் கொண்டே மறுபக்கம், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருப்பதால், அதைவிட கூடுதலாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையால் என்ன சாதித்து விட முடியும் என்று கேள்வி கேட்கிறார். சாதிக்க முடியாத ஒரு குழுவின் விசாரணைக்கு உத்தரவிடத் தயங்குவது ஏன்? இங்கேதான் சந்தேகம் வலுக்கிறது.

நாடாளுமன்றம் சுமூகமாக நடக்க வேண்டும் என்பதற்காகத்தான் ராசா ராஜினாமா செய்தார் என்று ஜனநாயகம் காக்கத் துணிந்த முதலமைச்சரிடம் ஒரு கேள்வி. இப்போது கூட 15 நாட்களாக நாடாளுமன்றம் ஸ்தம்பித் துக்கிடக்கிறது. நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி)அமைத்தால் அது இயல்பு நிலைக் குத் திரும்பி விடும். ஜனநாயகத்தைப் பாது காக்க ஜேபிசி விசாரணை என்ற கோரிக் கையை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று முதல் வர் யோசனை தெரிவிக்கலாமே!

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் திமுக முக்கியமான அங்கம் என்பது மட்டு மல்ல, அந்தக் கட்சியின் சார்பில் அமைச்சராக இருந்தவரின் பிரச்சனைதானே இப் போது புயலை கிளப்பிக் கொண்டிருக்கிறது! அப்போது வந்த ஜனநாயக சிந்தனை இப் போது வரவில்லையே! என்ன கொடுமடா இது.

-மயிலைபாலு

கருத்துகள் இல்லை: