வெள்ளி, 10 டிசம்பர், 2010

உங்களுக்கு நோபல் பரிசு வேண்டுமா?....





உடனே நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் சீனா, வடகொரியா, கியூபா, ஈராக், ஈரான் ஆகிய நாடுகளுக்கு எதிராக கலகம் செய்ய வேண்டும் அல்லது காட்டிக்கொடுக்கவேண்டும் அல்லது கூட்டிக்கொடுக்கவேண்டும் என நோபல் கமிட்டி அறிவித்து உள்ளது



அமெ. கைக்கூலிக்கு நோபல் பரிசு விழாவை புறக்கணிக்க சீனா வேண்டுகோள்


சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான மக்கள் குடியரசுக்கு எதிராக மேற்கத்திய நிதியுதவியுடன் கலகத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் அமெரிக்க கைக் கூலி லியூ ஜியாபவ் என்பவருக்கு இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசு வழங்கும் விழா வெள்ளியன்று நடைபெறவுள்ளது.


இந்த விழாவை சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, கஜக்ஸ்தான், கொலம்பியா, சவுதி அரேபியா, செர்பியா, இராக், ஈரான், வியட்நாம், கியூபா, ஆப்கானிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளன. இலங்கையும் அல்ஜீரியாவும் நோபல் கமிட்டியின் அழைப்பிதழை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. சீனாவுக்கு மேலும் 65 நாடுகள் ஆதரவு தெரிவித்திருப் பதாக சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜியாங்யூ கூறினார்.

ஆனால் இவ்விஷயத்தில் அமெரிக்காவுக்கு ஆதரவாக இந்தியா நிலைபாடு மேற்கொண்டுள்ளது

. இதுதொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, நோபல் பரிசு விழாவில் பங்கேற்பது இந்தியா-சீனா இடையிலான இருதரப்பு உறவு சம்பந்தப்பட்ட பிரச் சனை அல்ல என்றும், இவ்விழாவில் பங்கேற்பது என்று ஏற்கெனவே இந்தியா முடிவெடுத்துவிட்டது என்றும் கூறினார்.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

சந்தேகமிருந்தால் இந்த பட்டியலைப் பாருங்கள்

ஆண்ட்ரே சகரோவ்,
லெக் வாலேசா,
தலாய் லாமா,
மிகையில் கோர்பசேவ்

இந்த வரிசையில் லியு ஜென்போ என விருது கொடுத்து
நோபல் பரிசுகுழு தனது கம்யூனிச எதிர்ப்பு நிலையை
மீண்டும் நிலை நாட்டி விட்டது.