சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் பல மக்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்து வரும் கிரீஸ் அர சிற்கு எதிரான முழக்கங்க ளோடு லட்சக்கணக்கான மக்கள் பெருந்திரள் ஆர்ப் பாட்டங்களில் கலந்து கொண்டு வருகின்றனர்.
ஏற்கெனவே உள்ள நட வடிக்கைகளோடு புதிய ஊதிய வெட்டிலும் கிரீஸ் அரசு இறங்கியுள்ளது. இந்த நடவடிக்கைக்கு எதிராக நாடாளுமன்றம் நோக்கி ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற பேரணி நடை பெற்றது. மக்களின் கோபா வேசம் அதிகரிப்பதால் அடக்குமுறையைக் கட்ட விழ்த்துவிடவும் அரசு முனைந்துள்ளது. நாடா ளுமன்றத்தின் முன்பாகக் கூடிய மக்கள் மீது கண் ணீர்ப் புகைக்குண்டுகள் வீசப்பட்டன. பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ள னர். நாடாளுமன்றம் நோக் கிச் சென்ற மக்கள் பேர ணிக்கும் இரண்டு பெரிய தொழிற்சங்கங்களான அடெபி மற்றும் ஜிசி ஆகியவை ஆதரவு தெரி வித்தன.
தொழிற்சங்கங்கள் நடத் திய பொது வேலைநிறுத்தத் திற்கும் பெரும் அளவிற்கு ஆதரவு கிடைத்தது. விமா னங்கள் மேலே எழவில்லை. தொழிற்சாலைகள் இயங்க வில்லை. ரயில் நிலையங்கள் வெறிச்சோடிக் காணப்பட் டன. பத்திரிகையாளர் களும் வேலை நிறுத்தத்தில் இறங்கியதால் வானொலி மற்றும் தொலைக்காட்சி செய்திகள் வெளியாக வில்லை.
வேலைநிறுத்தம் வெற்றி பெற்றது குறித்து கருத்து தெரிவித்த ஜிசி தொழிற் சங்கத்தின் துணைத்தலை வர் ஸ்டாதிஸ் அனெஸ் திஸ், இந்த வேலைநிறுத் தத்தில் தொழிலாளர்கள் ஏராளமான அளவில் கலந்து கொண்டுள்ளனர். அரசு மீது கடுமையான நிர்ப்பந்தத்தை இந்த வேலைநிறுத்தம் ஏற்படுத் தும். தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதிக்கும் புதிய நடவடிக்கைகளை அரசு திரும்பப் பெற வேண் டும் என்று வலியுறுத்தினார்.
கடன் தந்துள்ள பன் னாட்டு நிதி நிறுவனங்கள் அரசு ஊழியர்களின் ஊதி யத்தை வெட்டவும், மக்கள் மீதான வரிகளை உயர்த்த வும் போட்ட நிபந்தனை களே தற்போது எழுந் துள்ள பிரச்சனைக்குக் கார ணம் என்று தொழிற்சங்கங் கள் கருத்து தெரிவித்துள் ளன. இந்த நிபந்தனைகளை அப்படியே நடைமுறைப் படுத்துவதை விட, நிதி ஆதாரத்தை உருவாக்க மாற்று வழிகளை அரசு தேட வேண்டும் என்பது அவர்களின் கருத்தாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக