செவ்வாய், 18 ஜனவரி, 2011

திருடர்களை விடமாட்டோம் என்று கத்திக் கொண்டே, திருடும் வித்தை


ஊழல்கள் இந்திரா காந்தி காலத்தி லேயே துவங்கிவிட்டன. அவர் காலத்தில் ஊழல்கள் வெளியில் தெரியாமல் கமுக்கமாய் நடந்தது. பின்பு அவரது ஆட்சியில் ஊழல்கள் அதிகரிப்பது பற்றிக் கேட்டபோது இந்திரா காந்தி கொஞ்சங்கூடக் கூச்சப்படாமல் “ஊழல் என்பது உலகம் முழுவதும் நடக்கும் விசயம்தான்” என்று பதிலளித்தார். இது 1983ல் நடந்தது. தில்லி உயர்நீதிமன்றத்தின் நேர்மையான ஒரு நீதிபதி “உயர்ந்த பீடத்தில் இருப்பவர்களே ஊழல்புரியும் ஒரு நாட்டில் ஊழலை எப்படி ஒழிக்க முடியும்” என்று கேட்டார்.

இந்திரா காந்தி மறைவுக்குப் பிறகு அவரது மகன் ராஜீவ் பதவி ஏற்றதும் “மிஸ்டர் க்ளீன்” என்று பட்டம் பெறுவதற்காக மிகவும் நடித்தார். ஆனால் 1989தேர்தலில் ராஜீவின் காங்கிரஸ் கட்சியை போபர்ஸ் பீரங்கி சுட்டு வீழ்த்தியது. போபர்ஸ் பீரங்கி பேரத்தில் ராஜீவ்- சோனியா குடும்பம் பெருமளவு ஊழல் செய்து பிடிபட்டது. அதிலிருந்து, ராஜீவ் மறைவுக்குப் பின் சோனியாவும் ராகுலும் எந்தப்பாடமும் கற்றுக்கொள்ளவில்லை. பெரிய அளவில் ஊழல் கடைவிரித்ததால் நாட்டுக்கு லட்சக் கணக்கான கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுள் ளது. மத்திய அரசில் சோனியாவுக்குத் தெரியா மல் எந்த ஊழலும் நடைபெற முடியாது என் பது இப்போது அனைவரும் அறிந்த விசய மாகிவிட்டது.

லஞ்சம், ஊழலை எதிர்த்துப் பேசிப் பேசியே “திருவாளர் பரிசுத்தம்” என்று பட்டம் சூட்டிக்கொண்ட ராஜீவ், பீரங்கி வாங்கியதில் செமபோடு போட்டார். சோனியாவும் அதே பாணியில் ஊழலை எதிர்த்துப் பேசினார். 2010 நவம்பரில் அலகாபாத்தில் நடந்த காங் கிரஸ் பேரணியில் “காங்கிரஸ் கட்சி ஊழலுக்கு எதிராகப் போராடுவதில் உறுதியாய் இருப்ப தாகவும், ஊழல் செய்பவர்கள் எவ்வளவு பெரி யவர்களாக இருந்தாலும் அதை அனுமதிக்க மாட்டேன். ஏனெனில் ஊழல் நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கும்” என்று சோனியா கொக்கரித்தார். அதற்கு சில வாரம் கழித்து தில்லியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிலும் இதே பேச்சைப் பேசினார். திருமதி சோனியா பேசும் நேர்மைக்குப் பின்னால் பிரம்மாண்ட ஊழல்கள் பவனிவருவதும், நாட்டையே சூறையாடுவதையும் காண்கிறோம். காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகள், ஆதர்ஷ், வங்கிக் கடன்கள், ஸ்பெக்ட்ரம் ஆகிய ஊழல் கள் பெருக்கெடுத்துள்ளன.

போபர்ஸ் ஊழல் ராஜீவின் திருவாளர் பரி சுத்தம் எனும் முகமூடியைக் கிழித்தெறிந்து விட்டது. சோனியாவின் ஊழல்கள் பகிரங்க மாக லஞ்சம், கையூட்டு என ஆயிரக்கணக் கான கோடிகள் ஸ்விஸ் வங்கிக் கணக்குக ளில் நிறைந்துள்ளன. இதில் குவாத்ரோச்சி மூலம் பீரங்கி வாங்கியதில் கிடைத்த கமிசன் பல்லாயிரம் கோடிகள் ஸ்விஸ் வங்கியில் கிடக்கும் கணக்குகள் தனியானதாகும். ஏனெ னில் அந்தப் பணம் போடப்பட்டு இருப தாண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. அப் போதே ரஷ்யப் புலனாய்வுப் பத்திரிகையாளர் சோனியா குடும்பம் லஞ்சம் வாங்கியதற்கான ஆதாரங்களை வெட்ட வெளிச்சமாக்கினார். திருடர்களை விடமாட்டோம் என்று கத்திக் கொண்டே, திருடும் வித்தையை முன்பே ஊடகங்கள் அம்பலப்படுத்தின.

ஸ்விஸ் வங்கியில் சோனியா கணக்கு

1991ம் ஆண்டு நவம்பர் 19ம்நாள் ஸ்விஸ் வங்கியில் ரகசியமாய் பணத்தைப் பதுக்கி வைத்துள்ள மூன்றாம் உலக நாடுகளின் பனி ரெண்டு அரசியல் தலைவர்களுடைய பட்டியலை ஸ்விட்சர்லாந்து பத்திரிகையான “ஸ்க் வீசர் இல்லஸ்ட்ரேட்” வெளியிட்டது. அதில் ராஜீவ்காந்தியின் பெயரும் இருந்தது. அதே நாட்களில் ரஷ்ய உளவு நிறுவனமான கே.ஜி. பி.யின் ரகசிய அறிக்கையும் வெளியானது. அவற்றில் வெளியான செய்தி இதுதான். “முன் னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் விதவை மனைவியான சோனியாகாந்தி ஸ்விஸ் வங்கியில் ரகசியக் கணக்கு வைத்துள்ளார். அவரது மைனர் மகன் (ராகுல்) பெயரில் 2.2 பில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் பத்தாயிரம் கோடி ரூபாய்கள்) போட்டு வைத்துள்ளார் என்ற விபரமும் ஆதாரப்பூர்வமாக வெளிவந்தது. அந்தப் பணம் முழுவதும் போபர்ஸ் பீரங்கி வாங்கியதில் ராஜீவ் பெற்ற லஞ்சப் பணம் என்றும் குறிப்பிட்டிருந்தது.

ஸ்விஸ் வங்கியில் டிபாசிட் செய்யப்படும் பணத்திற்கு வட்டி கிடைக்கும் விதத்தில், இருமடங்காய் பெருகும் முறையில் தனது மகனுக்கு சோனியா முதலீடு செய்தார். கடந்த இருபதாண்டுகளில் அது ஐம்பதாயிரம் கோடி வரை உயர்ந்து முதிர்வடைந்திருக்கும் என்று கூறப்படுகிறது. கே.ஜி.பி.தமது ரஷ்யத் தலைமைக்கு அனுப்பிய அறிக்கையில் “ரஷ்ய வர்த்தக அமைப்புகள் வியாபார ஒப்பந்தங்களில் ஈடுபட உதவுவதற்காக ராஜீவிற்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஏராளமான பணம் லஞ்சமாய் கொடுக்கப்பட்டுள்ளது. ராஜீவ் அதற்கு மிகுந்த நன்றி பாராட்டுகிறார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2005 டிசம்பரில் கே.ஜி.பி.யின் தலைவர் விக்டர் செப்ரிகோவ், ரஷ்ய அரசுக்குக் கொடுத்த அறிக்கையில் “ராஜீவ்காந்தி குடும் பத்தைச் சேர்ந்த சோனியா காந்தி, ராகுல் காந்தி, பாலோ மைனோ (சோனியாவின் தாயார்) ஆகியோருக்கு அமெரிக்க டாலர்களாகக் கையூட்டு வழங்க வேண்டியுள்ளது. அதை அளிப்பதற்கு எங்களுக்கு அதிகார மளிக்க வேண்டுமென்று” கூறினார். அதே காலத்தில் “இந்து” பத்திரிகையிலும் இதை உறுதிப்படுத்தி செய்தி வெளிவந்துள்ளது. 2009 ஏப்ரல் 29 - நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையும் சோனியாகாந்தி 2.2 பில்லியன் டாலரை ஸ்விஸ் வங்கியில் பதுக்கியுள்ளது பற்றி செய்தி வெளியிட்டது.

இந்தச் செய்தியைத் தொடர்ந்து சோனியா காந்தி மங்களூரில் “ஸ்விஸ் வங்கிகளில் வரி செலுத்தாமல் பதுக்கப்பட்டிருக்கும் பணத் தை மீட்க காங்கிரஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று பேட்டியளித்தார். இந்தியப் பத்திரிகைகள், ஸ்விஸ் மற்றும் ரஷ்யப் பத்திரி கையாளர்கள் வெளியிட்ட சோனியா குடும்பத் தின் பணப் பதுக்கல் பற்றிய செய்திகளை வெளி யிட்டன. இதை மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் அமல்தத்தா 1991 டிசம்பர் 7 -ல் நாடாளுமன்றத்தில் எழுப்பிப் பேசினார். அப்போது சபாநாயகராக இருந்த சிவராஜ் பாட்டீல், அமல்தத்தா பேசியதில் சோனியாவின் பெயரை அவைக்குறிப்பிலிருந்து நீக்கிவிட்டார். 1992ல் ரஷ்ய நிறு வனங்களுக்காக கே.ஜி.பி., ராஜீவ் குடும்பத்திற்கு வழங்கிய பெருந்தொகை குறித்த தகவல்கள் ஊடகங்களிலும், வலைத்தளங்களி லும் வெளியாயின. அமெரிக்கப் பத்திரிகை களில் ராஜேந்தர் பூரி என்ற பத்திரிகையாளர் இந்த ஊழலை அம்பலப்படுத்தியிருந்தார்.

இதை எதிர்த்து சோனியா விசுவாசிகள் அமெரிக்க நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தனர்.ஆனால் அமெரிக்க நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டது. அமெ ரிக்க மக்களுக்குத் தனது நேர்மையை நிரூ பிக்க சோனியா எடுத்த முயற்சி பலிக்கவில் லை. 22 லட்சம் டாலர் ஸ்விஸ் பணம் குறித்து வழக்கில் மறுப்பு எதுவும் கூறாததால் தள்ளுபடி செய்தது நீதிமன்றம். சோனியா குடும்பம் உள்ளிட்ட இந்தியர்கள் 21 லட்சம் கோடி ரூபாய்களை கொள்ளையடித்துச் சேர்த்துள்ள னர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அத் வானி “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஸ்விஸ் வங்கியில் உள்ள பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வருவோம்” என்று கூறினார். உட னே நாங்களும் அந்தப் பணத்தை மீட்போம் என்று சோனியாவும், மன்மோகன் சிங்கும் கூறினர். ஆனால் ஆட்சிக்கு வந்து ஆண்டு கள் கடந்தாலும் அதைச் செய்யவில்லை.

சோனியா குடும்பத்தின் பணமே ஸ்விஸ் வங்கியில் இருப்பதால் மத்திய அரசு ஸ்விஸ் வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள பணம் பற்றி வாய் திறக்காத நிலை தொடர்கிறது. பிரதமரா யிருக்கும் மன்மோகன் சிங் எந்தக் கோப்பி லும் சோனியா இனிஷியல் இன்றி கையொப்பம் இடுவதில்லை. எனவே ஊழல் செய்ய வாய்ப் புள்ள கோப்புகளும் அம்மையார் பார்வையிலி ருந்து தப்பாது. பங்கு வந்துவிட்டால் போதும். சோனியா குடும்ப ஊழல்கள் அனைத்தும் காங்கிரஸ் தலைவர்களுக்கு நன்கு தெரியும். அரசியலில் பிழைக்க வேண்டுமே என்பதற் காக எதிர்வழக்காடிப் பேசி வருகிறார்கள்.

கலைஞர் கருணாநிதி அதனால்தான் “ஒருவரே இவ்வளவு பெரிய ஊழலைச் செய்திருக்க முடியுமா” என்று கேட்டு மறை முகமாக மிரட்டினார். பயந்துதான் நாடா ளுமன்றக் கூட்டுக்குழு விசாரணையை ஏற்க மறுத்து வருகிறார்கள். காமன்வெல்த் போட்டிகளில் ரூ.76,000 கோடி செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளது. அதில் ரூ.40,000 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும், சுரேஷ் கல்மாடி சோனியாவின் நம்பகமான ஆள் என்றும் கூறப்படுகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழ லில் ரூ.60,000 கோடி கமிஷன் பெறப்பட்டுப் பங்கு போடப்பட்டதாகவும் செய்திகள் வரு கிறது. இவை முழுவதும் நாட்டு மக்களிடம் அம்பலமாகிவருகிறது.

இப்போது ஊழலை ஒழிக்கச் சட்டம் கொண்டு வரப்போவதாய் சோனியா-மன் மோகன் அறிவிப்பு வேறு வந்துள்ளது. ஊழல் பேர்வழிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டுமென்று ராகுல் கூறி யிருக்கிறார். ஆமென்.

ஆதாரம் : தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
-எஸ்.ஏ.பெருமாள்
(3-1-2011) திரு.எஸ்.குருமூர்த்தி கட்டுரை.

5 கருத்துகள்:

பொன் மாலை பொழுது சொன்னது…

சற்று பொறுத்திருப்போம். விக்கிலீக்ஸ் இணையத்தளம் யார் யார் பெயர்களை வெளியிடுகிறது என்று.

விடுதலை சொன்னது…

கக்கு - மாணிக்கம் அவர்களே இப்போதும் நமது மக்கள் வீதிக்கு வராமல் இருப்பது நமது கவலைளை அதிகரிக்கவே செய்கிறது. இதுவே எந்த ஐரோப்பிய நாடாக இருந்தால் நாடே பத்தி எரியும் பொருத்துபார்ப்போம் தங்கள் கருத்துக்கு நன்றி

Sankar Gurusamy சொன்னது…

VEry sad that we have been gifted with sush leaders. Understandably, there will not be anything serious in the wikileaks issues because the accounts will be in bogus names...:-(.. So very difficult to catch these thieves..

Let us wait and watch...

Visit to my blog :
http://anubhudhi.blogspot.com/

விடுதலை சொன்னது…

சங்கர் குருசாமி

பொருத்துபார்ப்போம்

தங்கள் கருத்துக்கு நன்றி

விஜய் சொன்னது…

நாம் செய்யும் சிறு சிறு சட்ட மீறல்களும் தவறுகளும் தான் இதுபோல பெரிய தவறுகளை தெருவில் இறங்கி தட்டிக்கேட்பதை தடுக்கிறது என்று கருதுகிறேன்.