புதன், 23 மார்ச், 2011

மாசம் ரூ.3000 கோடி கொல்லை அடிக்கும் கேபிள் டி.வி.யை இலவசமாக வழங்க தயாரா?

ரூ.3 ஆயிரம் கோடி அளவிற்கு தங்களது குடும்பத்திற்கு வரு மானம் தரும் கேபிள் டி.வி.யை தமிழக மக்களின் வீடுகளுக்கு இலவசமாக வழங்க முதலமைச்சர் கருணாநிதி தயாரா என்று தா. பாண்டியன் கேள்வி எழுப்பினார்.

நடைபெற உள்ள தமிழக சட்ட மன்ற தேர்தல் என்பது இந்தியாவிலேயே தனி முக்கியத்துவம் பெற்றுள்ளது. உலகம் இது வரை கண்டிராத ஊழலை செய்த கட்சி யினர் இப்போது விசாரணையிலும், சிறையிலும் இருக்கின்ற கட்சியின் தலைமையில் அணி அமைத்து மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிப்பதால் தமிழக தேர்தல் முக்கியமாக கவனிக்கப் படுகின்றது.

வாகனங்கள் மூலமாக, குறிப்பாக 108 ஆம்புலன்ஸ் மூலமாக வும், மேலும் பல வாகனங்கள் ஆம்புலன்ஸ் என்ற பெயரிலும் பணம் எடுத்துச் செல்லப்படு கிறது. இன்னும் சில இடங்களில் வேட்டி, சேலை வழங்கப்படும் ஆட்களை பிடித்து வழக்கும் பதிவு செய்து அவர்களை ஜாமீனில் விட்டுள்ளனர். தேர்தல் விதிமுறை களை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் அணியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விலகிக் கொண்டது, தேர்தலில் பங்கெடுக் காதது வேதனை தருகிறது. சுமூ கமாக்க சிபிஐ செய்த முயற்சியும் வெற்றியைத் தரவில்லை.

தமிழகத்தில் 197 வெளிநாட்டு நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவராலும் இங்கு தொழில் தொடங்க முடியவில்லை. மேலும் இது போன்ற நிறுவனங்களுக்காக 37,000 ஏக்கர் கையகப்படுத்தப்பட் டுள்ளது. அவர்களுக்கு மின் வெட்டே இல்லை. கிரைண்டர், மிக்ஸி என இலவசமாக தரு வதாக அறிவித்திருக்கிறார்கள். தங்கள் குடும்பத்தினருக்கு மாதந் தோறும் ரூபாய் 3000 கோடி வரு மானம் தரும் கேபிளை வீடுக ளுக்கு இலவசமாக அவர்களால் வழங்க முடியுமா?

1 கருத்து:

விடுதலை சொன்னது…

கேபிள் டி.வி., அரசுடைமை : கேபிள் டி.வி., அரசுடைமையாக ஆக்கப்படும். இத்தொழிலில் இருக்கும் ஏகபோகம் தடுக்கப்படும். அனைவருக்கும் இலவச கேபிள் டி.வி., இணைப்பு வழங்கப்படும்.

அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை