வியாழன், 10 மார்ச், 2011

அந்நிய முதலீடுக்கு தேசப் பாதுகாப்பையே சமரசம் செய்வீர்களா உச்ச நீதிமன்றம் கேள்வி ?


அதிக அளவில் அந்நிய முத லீடு வந்தால் தேசத்தின் பாது காப் பை சமரசம் செய்து கொள்வீர் களா என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப் பியுள் ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தொலைத்தொடர்புத் துறை இலாகாவில் இருந்த போது 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்பட்ட விதம் குறித்து உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் வளை குடா நாடுகள், பாகிஸ்தான், சீனா போன்றவற்றை சேர்ந்த நிறுவனங் களுக்கும் ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் வாரி வழங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து சுப்பிரமணிய சாமி, முன்னாள் தலைமைத் தேர் தல் ஆணையர்கள் லிங்டோ, டி. எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கோபா லசாமி, முன்னாள் மத்திய ஊழல் கண் காணிப்பு ஆணையர் சங்கர் உட்பட பல்வேறு தரப்பினரும் உச்சநீதி மன்ற த்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகளை நீதிபதிகள் சிங்வி, கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது.

உச்சநீதிமன்றத்தில் கடந்த 3ம் தேதி நடந்த விசாரணையின்போது, பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்ப தாக கூறப்பட்ட எஸ்-டெல் நிறுவனத் துக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கியது குறித்து விசாரிக்க வேண்டும் என சிபிஐக்கு உத்தரவிட்டது. எஸ்-டெல், எடிசலாட், டி.பி. (முன்பு ஸ்வான்) ஆகிய நிறுவனங்களால் தேசப்பாது காப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சுப்பிரமணிய சாமி தெரிவித்திருந் தார்.

இதில் எஸ்டெல் நிறுவனத் துக்கு ஏற்கெனவே ஒருமுறை உரிமம் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. இந்த நிலையில் வழக்கு விசாரணை புதனன்று மீண்டும் நடந்தது. அப்போது வெளிநாட்டு நிறுவ னங்களை பற்றி ஆய்வு செய்யாமல் ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் வழங்கி யதற்கு உச்சநீதி மன்றம் கடும் கண்ட னம் தெரிவித் தது. இதுகுறித்து நீதி பதிகள் கூறிய தாவது:-

எதிர்ப்பு

அரபு நாட்டை அடிப்படை யாகக் கொண்டு இயங்கும் எடிச லாட் மற்றும் எஸ்-டெல் நிறுவ னங்கள் மீது தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உள் துறை அமைச்சகம் எச்சரித்துள் ளது. இந்த நிறுவனங்களிடம் இருந்து தொலைத்தொடர்புத் துறையில் அந்நிய நேரடி முத லீட்டை பெற நிதி அமைச்சகமும், தொலைத் தொடர்புத் துறை அமைச்சகமும் முயன்றபோது, அந்நிய நேரடி முதலீடு ஊக்குவிப்பு வாரியமும் எதிர்ப்பு தெரிவித்துள் ளது.

அந்த நிறுவனங்களால் உள் நாடு மற்றும் வெளிநாட்டு அளவில் தேசப்பாதுகாப்புக்கு அச் சுறுத்தல் ஏற்படும் என்பதை மிகத் தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தை பொறுத்தவரை தேசப்பாதுகாப்பு என்ற கண் ணோட்டத்தில் அணுகி இருக்க வேண்டும்.

மத்திய அரசுக்கு கேள்வி

அவ்வாறு செய்யாமல் அந்த எச்சரிக்கை உதாசீனப்படுத்தப்பட்டு இருப்பது உண்மை என்றால், தேசத் தின் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்யப்பட்டிருக்கிறது என்றே அர்த்தமாகிறது. உங்களுக்கு (மத்திய அரசு) மிக அதிக அளவில் அந்நிய நேரடி முதலீடு வந்தால் தேசத்தின் பாதுகாப்பை சமரசம் செய்து கொள்வீர்களா?

இந்த விவகாரத்தில் நாங்கள் மிகச்சிறந்த தொழில்நுட்ப வல்லு நர்கள் அல்ல. ஆனால், நாட்டின் ராணுவ நடவடிக்கைகளையே, இந்த நிறுவனங்கள் தங்களுடைய தொலைத்தொடர்பு சேவை மூலமாக அறிந்துகொள்ள முடியும் என்பதைக் கூட ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யும் போது கவனத்தில் கொள்ளாதது ஏன்?

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித் தனர்.

கருத்துகள் இல்லை: