புதன், 30 மார்ச், 2011

திமுகாவின் மாமா வீரமணி அவர்களுக்கு ஒரு விளக்கம்



திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி யாரை ஆதரித்தாலும் அடு கேடு படுகேடாகத்தான் ஆதரிப்பார். நாம் அதனை ஆட்சேபிக்க இயலாது. அது அவரின் ‘சுதந்திரம்’!


ஏற்கெனவே 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழலை மூடிமறைக்க ரொம்பவும் சிரமப்பட்டு விடுதலை யில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட்டார். அவ ரது சொத்தையான வாதங்கள் எல் லாம் உச்சநீதிமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் நொறுங்கி விழுகின் றன.

இப்போது ‘‘திமுக ஆட்சியின் சாத னைகளும் அதிமுக அணியின் வேத னைகளும்’’ என்று ஒரு வக்காலத்தை தாக்கல் செய்திருக்கிறார்.

திமுகவின் ‘சாதனை’ களில் ஒன் றாக அவர் கூறியிருப்பது கலைஞர் காப்பீட்டுத் திட்டம், இதன் மூலம் ஏழை எளிய மக்கள் அன்றாடம் பலன் பெற்று வருவதாக அவர் குறிப்பிட் டுள்ளார். (பக். 18).

இந்தத் திட்டத்தின் உண்மை நிலை என்ன என்பதை ஒன்றிரண்டு உதா ரணங்களோடு அவருக்கு விளக்கு வது அவசியம். தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு இயக்கம் தரும் தகவல் களில் சில இங்கே வீரமணி அவர்கள் புரிந்து கொள்வதற்காகத் தரப்படுகின் றன:

உயிர்காக்கும் உயர்சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் நடைமுறையில் இருக்கும் இத்திட்டத்தின் மூலம் ஒரு குடும்பத் திற்கு 4 வருடத்திற்கு ஒரு லட்சம் மட்டும் ரூபாய் ஸ்டார் ஹெல்த் காப் பீட்டு நிறுவனம் வழங்கும். இத்திட் டத்தின் கீழ் 51 நோய்களை உள்ளடக் கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

புற்றுநோய்க்கட்டி என்ற சந்தேகத் தின் பேரில் அதை உறுதி செய்ய தேவைப்படும் பரிசோதனை செய் தால் அது புற்றுநோய் என்று உறுதி செய்யப்பட்டால் மட்டுமே, காப்பீட்டுத் திட்டத்தில் பணம் கிடைக்கும் (அதற் கும் உச்சவரம்பு உண்டு!) புற்று நோய் அல்லாத பிற கட்டிகள்/நோய்கள் என்று தெரியவந்தால் அதற் கான செலவினங் களை காப்பீட்டுத் திட்டத்தை நம்பி ஏமாறும் ஏழைக் குடும்பம் தன் வரு மானத்திலிருந்தோ, கடன் வாங்கியோ செலவு செய்ய வேண்டும்.

சிறுநீரக கல்லை அகற்றுவதற்கு ரூ.15,000 என்று நிர்ணயிக்கப்பட் டுள்ளது. ஆனால் இதற்கு ஆகும் உண் மையான செலவு ரூ. 40,000. மீதி

ரூ. 25,000ஐ நோயாளி தன்னுடைய சொந்தப் பணத்திலிருந்து செலவிட வேண்டும். அப்படி செலவிட வசதி யில்லாதவர்களை, மருத்துவமனை யில் அனுமதிக்க தனியார் மருத்துவ மனைகளின் நிர்வாகங்கள் தயங்கும். இல்லாவிட்டால், எவ்வளவு பிழை யிருக்கிறதோ அவ்வளவு குறைத்துக் கொள்ளுங்கள் என்று திருவிளை யாடல் திரைப்படத்தில் நாகேஷ் பேசும் வசனம் போல், எவ்வளவு அனு மதித்திருக்கிறதோ அந்த தொகைக் கான சிகிச்சையை மட்டும் கொடுத்து விட்டு மீதி சிகிச்சையை அரசு மருத் துவ மனைகளில் போய் பெற்றுக் கொள்ளுங்கள் என்று அனுப்பிவிடு கிறார்கள்.

இப்படியான அரைகுறை திட்டத்தை செயல்படுத்தும் ஸ்டார் ஹெல்த் நிறுவனத்திற்கு தமிழக அரசு முதலாம் ஆண்டில் 628.20 கோடி ரூபாய் செலுத்தியிருக்கிறது. கலை ஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பயனாளிகள் சார்பில் மருத்துவமனைகளுக்கு ஸ்டார் ஹெல்த் நிறுவனம் செலுத்தியிருக்கிற தொகை ரூ.415.43 கோடிதான். அதாவது மக் களின் வரிப்பணத்தை தமிழக அரசே முன்வந்து ஸ்டார் ஹெல்த் நிறுவனத் திற்கு ஆண்டொன்றுக்கு ரூ.200 கோடி லாபமாக வழங்கியிருக்கிறது! வெறும் 100 கோடியில் ஒரு மருத்து வக் கல்லூரியை அரசே திருவாரூரில் துவங்கும் போது, ஸ்டார் ஹெல்த் நிறு வனத்திற்கு லாபமாக கொடுத்த தொகையை வைத்து என்னவெல்லாம் செய்யலாம் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இந்நிலையில் இதே நிறு வனத்திற்கு இரண்டாம் ஆண்டில் 750 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறது. தனி யார் காப்பீட்டு நிறுவனங்கள் சுரண்டும் மக்கள் வரிப்பணத்தில் ஆட்சியாளர் களுக்கும் பங்கு இருப்பதால்தான் எல்லா அவலங்களும் இடம் பெறு கின்றன. சட்ட பூர்வமாக - விஞ்ஞான ரீதியாக ஊழல் நடக்கிறது என்பது தான் உண்மை.

வீரமணி அவர்களின் புத்தகத்தில் ஒவ்வொரு பக்க உள்ளடக்கத்திற்கும் மறுப்பு தெரிவிக்கலாம். ஒரு சோற்றுப் பதமாக இந்த விளக்கம் மட்டும்.

2 கருத்துகள்:

ராஜேஷ், திருச்சி சொன்னது…

அப்படியே இந்த பதிவு அ தி மு க வின் மாமா சோ விற்கு ஒரு பார்சல்

பெயரில்லா சொன்னது…

யாருப்பா இந்த ராஜேஸ்ங்ற திமுகு அல்லக்கை.