வெள்ளி, 29 ஏப்ரல், 2011

சட்டத்திற்கு சவால் விடும் தனியார் பள்ளிகள்


நாட்டில் படிக்கத் தகுதி வாய்ந்த 6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இலவச கட்டாய கல்வி வழங்குவது அடிப்படை உரிமை என்று சட்டம் இயற்றப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்து பொன் விழா கண்டபின்னர்தான் இது போன்ற சட்டத்தையே ஆட்சியாளர்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்றால், கல்வியின் மீது அவர் களுக்குள்ள அக்கறை எந்த அளவிற்கு இருந் தது என்பது தெரிகிறது.இடதுசாரி மாணவர் அமைப்புகளும் வாலிபர் அமைப்புகளும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் பல ஆண்டு களாக வலியுறுத்தி வந்த இந்த கோரிக்கை சட்டமாக்கப்பட்டு ஒராண்டு கூட முடியவில் லை. அதற்குள் இந்த சட்டத்தை சீர்குலைக்க சில சக்திகள் முயற்சிக்கின்றன.

கல்வி பெறுவது அடிப்படை உரிமை என்ற சட்டத்தை அனைத்து மாநில அரசுகளும் வரும் கல்வியாண்டிலிருந்து அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதன்படி தனியார் பள்ளிகள், தங்களது பள்ளி யை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய மற்றும் நலிந்த பிரிவை சேர்ந்த மாண வர்களுக்கு 25 விழுக்காடு இடங்கள் ஒதுக்க வேண்டும். 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்தை அமல்படுத்த அரசு விதிமுறைகளை யும் உருவாக்கியது. ஆனால், அவற்றை வெளிப் படையாக அறிவிக்காமல் வைத்திருப்பது தனியார் பள்ளிகளுக்கு சாதகமாக மாறிவிட்டது.

சென்னை அடையாரில் உள்ள ஸ்ரீ சங்கரா சீனியர் செகன்ட்ரி பள்ளி நிர்வாகம் இந்த சட்டத்தை அமல்படுத்த மறுப்பதோடு இதுதொடர்பாக தனது பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளது. அதில் ஏழை, எளிய பிள்ளைகளுக்கு அரசு சட்டத்தின் கீழ் இடங்களை ஒதுக்கினால், பள்ளியின் தரம் குறையும் என்றும், தங்களது குழந்தைகளுக்கு அந்த குழந்தைகளால் பிரச்சனை ஏற்படும் என்றும் கலவரத்தை தூண்டிவிட்டுள்ளது.

சாதாரண சமூகத்திலிருந்து வரக்கூடிய மாணவர்கள் பள்ளிகளில் மோசமாக நடந்து கொள்வார்கள் என்றும், அதனால், மற்ற மாண வர்களின் படிப்பு பாழாகும் என்றும் அப்பள் ளிகள் கூறுவதன் மூலம், அவர்கள் எந்த வர்க் கத்தை சேர்ந்தவர்கள் என்பதும், சமூக நீதியை குழி தோண்டி புதைக்க முயற்சிப்பதும் அம்பல மாகியுள்ளது.

ஏழை மாணவர்களுக்காக உள்ளூர் மொழி யில் பாடங்களை கற்றுக்கொடுப்பது இயலாத காரியம் என்றும், அந்த மாணவர்கள் பள்ளிக்கு நாள்தோறும் வரவில்லை என்றாலும் பாடங் களை படிக்கவில்லை என்றாலும் ஒன்பதாம் வகுப்பு வரை கட்டாயம் தேர்ச்சி அளிக்க வேண்டும் என்பது பிற மாணவர்களை பாதிக் கும் என்றும் நிர்வாகம் கூறியுள்ளதன் மூலம் ஏழை மாணவர்கள் மீதான குரோத உணர்வை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த மாணவர்களுக்கு இலவச கல்வி அளிப்பதால் தற்போது படிக்கும் மாணவர்க ளின் கல்வி கட்டணத்தில் 25 விழுக்காடு உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும் என்று பெற்றோர்களுக்கு நிர்வாகம் மிரட்டல் விடுத் துள்ளது.

ஏழை, எளிய மாணவர்கள் கல்வி பெறும் உரிமையை பறிக்கும் இத்தகைய முயற்சிகளுக்கு எதிராக மாணவர், வாலிபர் அமைப்புகள் போராடி, சட் டத்திற்கு சவால் விடும் தனியார் பள்ளிகளின் கொட்டத்தை ஒடுக்கவேண்டும்.

1 கருத்து:

குருஷ்சேவ் சொன்னது…

இது போன்ற பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து, இழுத்து மூட வேண்டும்.