திங்கள், 16 மே, 2011

குழந்தைகள் மார்க் வாங்கும் மிஷின்களா?

ஏழை மாணவர்களுக்குத் தரமான கல்வி கிடைக்க வழி செய்யும் கல்விக்கான உரி மைச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகள் மொத்த மாணவர்களில் 25 சதவீதம் வரை ஏழை மாணவர்களுக்கு இடம் தர வேண்டுமென்று இப்போது விதிக்கப்பட்டிருக்கிறது. இதை எதிர்த்து, சென்னையில் சில மேட்டுக் குடி பள்ளிகள் பெற்றோருக்கு அனுப்பிய சர்க் குலரைப் படித்ததும் எனக்கு ரத்தம் கொதிக்கிறது.

அந்த ஏழை மாணவர்களின் பெற்றோர்கள் கிரிமினல்களாக இருப்பார்களாம். சுத்த மில்லாமல் இருப்பார்களாம். அந்தக் குழந்தைகளுடன் உங்கள் குழந்தைகள் சேர்ந்து படித்தால் கெட்டுப்போய்விடுவார்கள். நோய்கள் வரும். பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லை. எனவே எங்களுடன் சேர்ந்து நீங்களும் சட்டத்தை எதிர்க்க வேண்டும் என்று சர்க்குலர்களில் விஷம் கக்கியிருக்கிறார்கள். எனக்கு அதிகாரம் கிடைத்தால் இந்தப் பள்ளி நிர்வாகங்களை சிறையில் தள்ளி அந்தப்பள்ளிகளை அரசுடைமையாக்கிவிடுவேன். இப்படிப்பட்ட சமூக விரோத சிந்தனையுள்ளவர் கள் கல்வித்துறையில் இருக்கவே தகுதியற்றவர்கள்.

1978 வரை தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பல இடங்களிலும் ஏழைகளும் மிடில் கிளா சும், பணக்காரர்களும் ஒரே பள்ளிகளில் தான் படித்தார்கள். சி.வி.ராமன், ராமானுஜம் முதல் அப்துல் கலாம் வரை இப்போது 50 வயதுக்கு மேற்பட்ட சகல துறைப் பிரபலங்களும் அறி ஞர்களும் அப்படித்தான் படித்தார்கள்.

எல்லோருக்கும் சமமான, தரமான கல்வி என்பதுதான் அப்போதைய அணுகுமுறை யாக இருந்தது. எண்பதுகளில்தான் இது மாறி, காசுக்கேத்த கல்வி என்று திரிக்கப்பட்டது. கல்வி முறையே அறிவைப் பெறுவதற்கான வழி என்று இருந்தது போய், மதிப்பெண் வாங் குவது மட்டுமே நோக்கம் என்றாக்கப்பட்டது. குழந்தைகள் மார்க் வாங்கும் மிஷின்களாக ஆக்கப்பட்டார்கள். அதைத் தவிர வேறு எந்தப் பொது அறிவும் ரசனையும் இல்லாத அறிவிலி களாக வார்க்கப்பட்டார்கள்.


ஞாநி

நன்றி: கல்கி (22.5.2011

2 கருத்துகள்:

பனித்துளி சங்கர் சொன்னது…

தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி ,. தொடரட்டும் உங்களின் சேவை

விடுதலை சொன்னது…

பனித்துளி சங்கர்
அவர்களுக்கு
தங்கள் வருகைக்கும்
கருத்துக்கும் நன்றி