வியாழன், 19 மே, 2011

அம்பானிக்கு விலைக் குறைப்பு! “ஆம் ஆத்மி”க்கு விலை அதிகரிப்பு!!



பெட்ரோல் விலையில் ஐந்து ரூபாய் அதிகரித்திருப்பதன் மூலம், விமான எரிபொருள் விலையை விட மீண்டும் பெட்ரோலின் விலை அதிகரித்திருக்கிறது.

பெட்ரோல் விலை அதிகரித்த அதே வேளையில், விமான எரிபொருள் விலையில் சரிவும் ஏற்பட்டிருக்கிறது. தில்லியில் ஒரு லிட்டர் விமான எரிபொருளின் விலை தற்போது ரூ.58.80 ஆக உள்ளது. அதே வேளையில், பெட்ரோலின் விலை ஒரு லிட்டருக்கு ரூ.63.40 ஆக உயர்ந்திருக்கிறது. மும்பையில், விமான எரிபொருளின் விலை ரூ.59.60 ஆகவும், பெட்ரோலின் விலை ரூ.68.30 ஆகவும் உள்ளது.

அம்பானி, டாடா, சிங்கானியா போன்றவர்கள் வைத்திருக்கும் சொந்த விமானங்களுக்குள்ள எரிபொருள் விலை, சாதாரண மக்கள் வைத்திருக்கும் இரண்டு சக்கர வாகனங்களுக்கான எரிபொருளை விட குறைவாக இருக்கிறது. இருந்தாலும், எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் என்ற காரணத்தை சொல்ல ஆட்சியாளர்கள் தயங்குவதேயில்லை.

விமான எரிபொருளுக்கான விலை சர்வதேசச் சந்தையில் குறைந்ததுதான் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. சர்வதேசத் சந்தையில் பெட்ரோல் விலை பெரும் சரிவைச் சந்தித்தபோது, அந்த அளவுக்கு இந்தியாவில் பெட்ரோலின் விலை குறைக்கப்படவில்லை. இடதுசாரி கட்சிகள் ஆதரவில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருந்தபோது மட்டும் இரண்டு முறை பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது.

விமான எரிபொருள் விலை குறைந்துள்ளது என்பது பயணிகளுக்கு எந்த லாபத்தையும் தரவில்லை. விமான பயணக்கட்டணங்களில் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. விமான நிறுவனங்களுக்கு கொள்ளை லாபம். அதோடு, சொந்தமாக விமானங்கள் வைத்திருக்கும் “ஏழை பயணி”களுக்கு லாபம் கிடைக்கப்போகிறது. அவ்வளவுதான்.

2 கருத்துகள்:

ஷர்புதீன் சொன்னது…

உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 40/100 மார்க். நன்றி!

விடுதலை சொன்னது…

சகோ.ஷர்புதீன் அவர்களுக்கு தங்கள் வருகைக்கு முதலில் நன்றி

எனது வலைப்பூக்கு பாஸ் மார்க் கொடுத்தற்கு நன்றி நான் அதிக மார்க் வாங்க செய்யவேண்டியது என்ன என்று கூறினால் நன்றாக இருக்கும்