வெள்ளி, 24 ஜூன், 2011

சமச்சீர் கல்வி திமீர்பிடித்த ஆண்டைகளின் கல்வி அல்ல

கடந்த ஆட்சியின்போது கொண்டு வந்த சில திட்டங்களை நிறுத்தி வைத் திருப்பதும், புதிதாக பல திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அறிவித் திருப்பதும், 2001-2006 ம் ஆண்டுகளில் இன்றைய அரசு அன்று கொண்டுவந்த உழவர் பாதுகாப்பு த்திட்டத்தை மாற்றி விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் சமூகப்பாதுகாப்புத் திட்டமாக மாற்றி செயல்படுத்தியதும், இன்றைய அரசு அதனை நிறுத்திவிட்டு புதிய திட்டம் கொண்டுவரப்போவதாக அறிவித்துள்ளதும் புதிய தலைமைச் செயலக கட்டுமானப்பணிகள் முடிவடையவில்லை என்பதால் அங்கு செல்லவில்லை என்பதும், ஆட்சிமாற்றத்தின் போது தமிழகத்தில் ஏற்படும் காட்சி மாற்றங்கள் ஆகும். இதனை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

ஆனால் சமச்சீர் கல்வி என்பது கடந்த ஆட்சி தானாகக் கொண்டுவந்த திட்ட மல்ல. ஐ.நா.சபை உலகிலுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் சமமான, தரமான கல்வி கொடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றிய பின் அதனை ஏற்றுக் கொண்ட இந்திய அரசு, இந்தியாவிலும் அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய இலவச தரமான சமச்சீர் கல்வியை அளிக்கவேண்டுமென 2002 ஆம் ஆண்டு சட்டம் இயற்றியது.

இச்சட்டத்தை செயலாக்க அடிப் படை கல்வி உரிமை வழங்கும் சட்டத் தையும் மத்திய அரசு 2002 ஆம் ஆண்டு சட்டமாக நிறைவேற்றியுள்ளது. இந்திய அரசு அடிப்படை இலவசக்கல்வி வழங் குவது எனச் சட்டம் இயற்றினாலும், கல் விக்கு நிதி ஒதுக்கி கண்காணித்து செயல்படுத்த எந்த ஒரு முயற்சியையும் அது எடுக்கவில்லை. மாறாக தனியார் மயம், தாராள மயம் என்ற தொழிற்கொள் கை போல கல்வியையும் தாராள மயமாக் கிவிட்டதன் விளைவு, தனியார் கல்வி நிலையங்கள் தோன்றிவிட்டன. இன்று தமிழகத்தில் 69,067 தனியார் பள்ளிகள் உள்ளதாக அரசின் ஓர் புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது. அது மட்டுமல்லாமல் கணக்கில் வராத அரசின் அனுமதி பெறாத பள்ளிகள் ஆயிரக்கணக்கில் உள்ளதாகப் பத்திரிகைச்செய்திகள் தெரிவிக்கின்றன.

உத்தேசமாக 32,547 அரசுப்பள்ளிகளில் 130 லட்சம் மாணவர்களும், 4 லட்சம் ஆசிரியர்களும் உள்ளனர். கல்விக்காக அரசு செலவிடுவது ரூ.7102 கோடியா கும். இருந்தும் அரசுப்பள்ளிகளின் நிலைமையும் தரமும் உலகமறிந்த விசயமாகும். அரசு, தனியார் பள்ளிகளை ஊக்குவிப்பதற்காகவே அரசுப்பள்ளிகளின் தரத்தைப் பற்றி கவலைப்படாமல் கண்காணிக்காமல் விட்டுவிட்டது.

தமிழ்நாட்டில் தனியார் கல்வி நிலையங்களை யார் நடத்திக்கொண்டிருக் கிறார்கள் என்பது ரகசியமான விசயமே அல்ல. கல்வி நிலையங்களில் கிடைத்த லாபத்தை பார்த்த அரசியல்வாதிகள், செல்வந்தர்கள் தங்களைக் கல்வியின் புரவலர்கள், தந்தைகள் எனக்கூறிக்கொண்டு கல்வி நிலையங்களை நடத்திக் கொண் டிருக்கிறார்கள்.

அரசு தனது கல்விக்கொள்கைகளை பெயரளவிற்கு அமல்படுத்தியதன் விளை வும் ஆசிரியர் பற்றாக்குறை, ஆசிரியர்களின் அலட்சியம், கட்டிட வசதியின்மை, அரசுப்பள்ளிகளில் கல்வியின் தரத்தை பாதுகாக்க தேவையான கண்காணிப்பில்லாதது, தொடர் முயற்சி மேற்கொள்ளாதது போன்ற காரணங்களால் கல்வித்தரம் என்பது குறைந்துவிட்டதாலும், பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஆங்கில மோகமும்; தனியார் கல்வி நிலை யங்களை நோக்கிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டது.இதனால் தனியார் கல்வி நிலையங்கள் இன்று லாபகரமான தொழிலாக மாறிவிட்டது. சமச்சீர் கல் வியை அமல்படுத்த அரசு முயற்சித்த வுடன் இன்று அனைவரும் மத்திய கல் வித்திட்டம் என ஆரம்பித்துவிட்டனர்.

ஆரம்பத்தில் கூரை கொட்டகை போட்டு மாணவர்களிடமே கட்டணம் வசூலித்து, கட்டிடம் கட்டி தரமான ஆங்கிலக்கல்வியை தருவதாக கூறினாலும், வேலைவாய்ப்பு, ஆங்கில மோகம் போன்ற காரணங்களால் மக்களும் தனியார் கல்வி நிலையங்களை நாடுகின்றனர்.

தனியார் கல்வி நிறுவனங்கள் இன்று வசூலிக்கும் கல்விக் கட்டணம் என்பது சாதாரண மக்கள் செலுத்தும் நிலையில் இல்லை என்பதை எவராலும் மறுப்பதற் கில்லை. சமீபத்தில் தனியார் பள்ளிகளில் படிக்கும் தனது குழந்தைகளுக்கு கல்விக்கட்டணம் செலுத்த இயலாமல் பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட கோரச்சம்பவம் நமது நெஞ்சை உருக்கும் செய்தியாகும். கல்விக்கட்டணம் செலுத்த இயலாதவர்கள் ஏன் அங்கு சேர்க்க வேண்டும் என்ற கேள்வியும் எழுவது இயற்கையே. தனியார் மயத்தை ஆத ரித்து, அவை ஆல விருட்சம் போல வளர்ந்து விட்ட நிலையில் வேறு வழியில்லாமல் எல்.கே.ஜிக்கே கூட 45 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிப்பது இன்று சர்வசாதார ணம். அதைவிட அங்கு இடம் பிடிப்பது கடினம்.

இன்று தனியார் பள்ளிகளில் தரமான கல்வி தரப்படுவதாக கூறிக்கொண்டா லும் அங்கு படிக்கும் மாணவர்கள் 100 விழுக்காடு வெற்றி பெறுவது, அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறுவது என்பது தான் அப்பள்ளிகளின் இலக்காக உள்ளது. உயர்நிலைக்கல்வி பெறும் மாணவர்களில் எத்தனை பேர் ஆங்கிலம் சரளமாகப் பேசுகின்றனர் என்பது கேள்விக்குறியே. மேலும் ஓராண்டு கல்வியை ஒன்றரை ஆண்டுகள் நடத்தி மனப்பாடம் செய்யவைத்துத் தான் 100 சதவீத தேர்ச்சி கொண்டுவரப்படுகிறது. இன்று அரசுப்பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சியும், மாநில அளவில் முதல் மதிப்பெண்ணும் கூட பெற முடிகிறது என்பதும், மாவட்ட ஆட்சியர்களே கூட தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க் கின்றனர் என்பதும் மகிழ்ச்சியானதாகும்.

இதன் காரணமாகவே கல்வியாளர்கள், பெற்றோர்கள், முற்போக்கு மாணவர் அமைப்புகள் ஆகியோர் தொடர்ந்து சமச்சீர் கல்வியை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தியதாலும் தனியார் கல்வி நிறுவனங்களின் நிர்ப்பந்தங்களை யும் மீறி முனைவர் முத்துக்குமரன் தலை மையில் நிபுணர் குழு அமைத்து அறிக் கை பெற்று மிகுந்த தயக்கத்திற்குப்பின் சமச்சீர் கல்வி கொண்டுவரப்பட்டது என்பது தான் உண்மையாகும்.

தமிழகத்தில் இன்று அறிமுகப்படுத் தியுள்ள சமச்சீர்கல்வி என்பது தரமானது என்று நாம் கூறவில்லை. ஆரம்பக்கல்வி என்பது குழந்தைகளுக்கு அருகில் உள்ள பள்ளிகளில் தரமான இலவசக்கல்வி அனைவருக்கும் வழங்குவதுதான். சமச்சீர் கல்வி ஏட்டளவில் இல்லாமல், தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் மூலம் உலகத்தரத்திற்கானதாகவும் வேலை வாய்ப்பு நடைமுறை அறிவு சார்ந்தும் கொண்டு வர முயற்சிக்க வேண்டும் என்பதுதான் நமது ஆசையும் விருப்பமும் ஆகும்.

சமச்சீர் கல்வியின் தேவை பின்னணி இவ்வாறிருக்க, இதனை நிறுத்தி வைப்பது என அரசு சட்டம் இயற்றி அது உச்சநீதிமன்றமும் சென்று, உச்சநீதிமன் றமும் 1 மற்றும் 6 ஆம் வகுப்புக்களில் அது தொடரவேண்டும் எனவும் 2 முதல் 5 மற்றும் 7 முதல் 10 ஆம் வகுப்பு வரை நிபு ணர்குழு அமைத்து உயர்நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என வும், உயர்நீதிமன்றம் அதனை தினமும் விசாரித்து தீர்ப்பு வழங்க உத்தரவிட் டுள்ள நிலையில், இதர திட்டங்களைப் போல இது முந்தைய அரசின் திட்டம் என பார்க்காமல் கவுரவப்பிரச்சனையாக பார்க்காமல் ஊழலுக்கு எதிராக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சி போல இது மக்கள் எழுச்சி காரணமாக கொண் டுவரப்பட்ட சமச்சீர்கல்வி என்பதால் இந்த ஆண்டே அனைத்துப்பள்ளிகளிலும் அமல்படுத்த முன்வர வேண்டும்.  திமீர்பிடித்த ஆண்டைகளின், மேல்தட்டுமக்களின் லாபவெறிக்கும். ஏழையும் தனது பிள்ளையும் ஒரே கல்வியை கற்பதா? என்ற வக்கிர எண்ணமும் கொண்டவர்களுக்கு துணைபோககூடாது. அரசின் ஒவ்வொரு நடவடிக்கையையும் மக்கள் மிகவும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மட்டும் அரசு கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்

மா.அண்ணாதுரை
கட்டுரையாளர், மாவட்ட வருவாய் அலுவலர்(ஓய்வு)

கருத்துகள் இல்லை: