செவ்வாய், 28 ஜூன், 2011

பொன்விழாவை பயணத்தில் மக்களின் போர்க்குரல் ‘தீக்கதிர்’






தீக்கதிர் நாளேடு இன்று 49ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஆம். அடுத்த ஆண்டு தமிழக உழைக்கும் மக்களின் போர்வாளாகவும், கேடயமாகவும் விளங்கும் நம்முடைய நாளேட் டிற்கு பொன்விழா.

29.6.1963 அன்று வார ஏடாக தீக்கதிர் தனது நெடிய பயணத்தை துவக்கியது. மாமேதை லெனின் துவக்கி நடத்திய ஏட்டின் பெயர் ‘இஸ்க்ரா’ அந்த ரஷ்ய வார்த் தையின் தமிழ் மொழி பெயர்ப்பை பெயராகக் கொண்டு தீக்கதிர் துவங்கப்பட்டது.

தீக்கதிரின் முதல் அலுவலகம் சென்னை கோடம்பாக்கம் பகுதியில் உள்ள ஆண்டவர் நகரில் கட்டிடம் ஒன்றின் மாடியில் ஒரு அறை யில் செயல்பட்டது. தீக்கதிரை அச்சிட்டுத் தரக் கூட பல அச்சகத்தார் தயங்கிய நிலையில் கொடுமையான இடர்பாடுகளுடன்தான் நம்மு டைய ஏட்டின் துவக்கக்காலம் அமைந்தது.
மணியார்டர் வந்தால்தான் அன்றைய மதி யச்சாப்பாடு என்று கடுமையான நிதி நெருக்கடி யைச் சமாளித்துக்கொண்டுதான் தலைவர்களும் ஊழியர்களும் இந்த ஏட்டை நடத்தி வந்தனர்.

தீக்கதிரை அச்சிட்டு தந்த ஒரே காரணத்திற் காக சென்னை கீதா அச்சகத்தின் உரிமையாளர் சத்திய நாராயணன் கைது செய்யப்பட்டு நான்கு மாதச் சிறைத் தண்டனை அனுபவித்தார் என்பது இங்கு நினைவில் கொள்ளவேண்டிய ஒன்று.

1967ஆம் ஆண்டில்தான் தீக்கதிருக்கு என்று சொந்த அச்சகம் அமைக்கப்பட்டது. 1969ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமையகம் மதுரையிலிருந்து செயல்படத்துவங்கியபோது தீக்கதிரும் மதுரையிலிருந்து வெளிவரத்துவங்கியது.

1971ஆம் ஆண்டு முதல் தீக்கதிர் நாளேடாக தனது பயணத்தை துவக்கியது.

இந்தியாவில் 1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. ஜன நாயகமே இருளில் ஆழ்த்தப்பட்டது. 19 மாத காலம் நீடித்த இந்த அவசரநிலை காலத்தில் தீக்கதிரும் கடுமையான நெருக்கடியைச் சந்தித்தது. ஒவ்வொரு நாளும் தீக்கதிரை வெளிக்கொண்டுவருவதே ஒரு பெரும் போராட்டம். காந்தி,நேரு போன்றவர்களின் பொன்மொழியை பிரசுரிக்கக்கூட அனுமதி இல்லை. அனைத்துப் பத்திரிகைகளும் கடுமை யான தணிக்கை முறையை சந்தித்தன என்றா லும், தீக்கதிரைப் பொறுத்தவரை இரட்டைத் தணிக்கை முறையைச் சந்தித்தது. அப்போது குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களை யும், குறைவான வாய்ப்பு வசதிகளையும் வைத் துக்கொண்டு தணிக்கை முறையையும் அடக்கு முறைகளையும் தாங்கி தீக்கதிர் வெளிவந்தது என்றால் அதற்குக் காரணம் அதன் லட்சியப் பிடிப்பே ஆகும்.

இன்றைக்கு தீக்கதிர் மதுரை, சென்னை,கோவை,திருச்சி என நான்கு திசைகளிலிருந்தும் நான்கு பதிப்புகளுடன் கம்பீரமாக வெளிவந்துகொண்டிருக்கிறது.

தேச நலனையும் உழைக்கும் மக்களின் நலனையும் பாதுகாக் கும் போர்ப்படை வீரனாக அரை நூற்றாண்டுக் காலம் தீக்கதிர் தனது பயணத்தை நடத்தி வருகிறது.
ஊடகத்துறை இன்றைக்கு பெருமளவு வளர்ந்துள்ளது. தொலைக்காட்சிகளில் 24 மணி நேர செய்திச் சேனல்கள் வந்து விட்டன. பத்திரி கைகளும் ஏராள மாக வந்துகொண்டிருக்கின் றன. அந்த ஊடகங்களுக்கு இருக்கும் வாய்ப் பும் வசதியும் உழைக்கும் மக்களின் நாளேடான தீக்கதிருக்கு இல்லை. கடுமையான காகித விலை உயர்வு, அச்சு மை உள்ளிட்ட பொருட் களின் விலை உயர்வைச் சந்திக்க வேண்டியுள்ளது.

அரசு விளம்பரமும் தொடர்ச்சியாகக் கிடைப் பதில்லை. மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் மற்றும் ஆதரவாளர்களின் பக்கபலம்தான் தீக்கதிரின் மிகப்பெரிய பலமாகும்.

மேற்குவங்கத்திலும் கேரளத்திலும் இடது சாரி சக்திகளுக்கு எதிராக கார்ப்பரேட் ஊடகங் கள் எந்தளவிற்கு விஷமத்துடன் விஷம் கக்கின; கக்கி வருகின்றன என்பதை நாம் அறிவோம்.

ரிலையன்ஸ் நிறுவனம் தொடர்புடைய ரூ.45ஆயிரம் கோடி ஊழல் குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு விடுத்த அறிக் கையைக்கூட பிற ஏடுகள் வெளியிடவில் லை என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழகத்திலும் கூட நம்முடைய செய்தி களை ஊடகங்கள் முழுமையாக வெளியிடுவ தில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நம்முடைய தொழிற்சங்கம் மற்றும் வெகுஜன அமைப்புகளின் கருத்துக்களை மக்களிடம் விரிவாக எடுத்துச்செல்ல நம்மிடம் உள்ள கருத்துவாகனம் தீக்கதிர்தான்.

ஜனநாயகம், மதச்சார்பின்மை, கல்வி, சுகா தாரம், தீண்டாமை ஒழிப்பு,பெண்ணுரிமை, உழைப்பாளி மக்கள் நடத்தும் போராட்டம். தாராளமயப் பொருளாதாரக் கொள்கையை எதிர்த்த போர்க்களங்கள், மனித உரிமை மீறல், ஊழல் எதிர்ப்பு சார்ந்த செய்திகள் போன்றவற்றை எந்தவித அச்சமுமின்றி வெளி யிடக்கூடிய திறன் நமது தீக்கதிருக்கு உண்டு.

தமிழகத்தில் நம்முடைய கட்சியை வலுவாக வளர்ப்பதன் ஒரு பகுதியே தீக்கதிரை மேலும் விரிவான மக்கள் திரளிடம் கொண்டு செல்வது மாகும். தீக்கதிர் நாளேட்டின் விற்பனையை மேலும் அதிகரிக்கும் வகையில் ஆகஸ்ட் 1 முதல் 15ம் தேதி வரை தமிழகம் முழுவதும் சந்தா சேர்ப்பு மற்றும் விற்பனை இயக்கத்தை நடத்துவதென கட்சியின் மாநிலக்குழு முடிவு செய்துள்ளது. ஜூலை மாதம் முழுவதும் இதற் கான தயாரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
இந்த மகத்தான பணியில் கட்சி அணிகள் முழுமையும் உற்சாகத்துடன் களத்தில் இறங்க வேண்டியது அவசியமாகும். தயாரிப்புத் தளம் வெற் ணறிகரமாக அமையும்போது தான் விற் பனை இயக்கம் இலக்கைத் தொடமுடியும். தீக் கதிரின் இலட்சிய ஒளி திசைகள் தோறும் பரவட்டும்.

1 கருத்து:

rajamelaiyur சொன்னது…

வலைசரத்தில் உங்களை பற்றி எழுதி உள்ளேன் நேரம் இருந்தால் பார்க்கவும்

வாழ்க.. ஒழிக… ஒழிக… வாழ்க