புதன், 13 ஜூலை, 2011

கல்வி வியாபாரிகளின் கண்ஜாடைக்கேற்ப அறிக்கை

சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘கல்வியாளர் கள்’குழு சமர்ப்பித்திருக்கிற அறிக்கை கல்வி வியாபாரிகளின் கண்ஜாடைக்கு ஏற்ப தயாரிக் கப்பட்டதோ என்ற எண்ணத்தையே வலுவாக விதைக்கிறது. ஆயினும் தமிழகத்தில் கடந்த ஒரு மாதகாலமாக கல்விக் கூடங்களில் ஒரு பதற்ற மும் ஒரு விரக்தியும் சூழ்ந்துள்ளது. அதற்கு தமிழக அர சின் தவறான முடிவே காரணம். சமச் சீர் கல் வியை ஏற்கக்கூடாது என்பது கல்வி வியாபாரிக ளின் விருப்பம். ஏனெனில், அனைவருக்கும் ஒரே பாடத்திட்டத்தில் ஒரே மாதிரி கல்வி கிடைக்கும் நிலை உருவானால் தங்களின் வியாபாரம் படுத்துவிடும் என அவர்கள் கருதுகிறார்கள்.

அதிமுக அரசும் தரம் இல்லை என்ற காரணத் தைச் சொல்லி நிறுத்தி வைத்தது. நீதிமன்ற வழக் குகளுக்குப் பின் பள்ளிக் கூடங்களில் பாடம் நடத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. உச்சநீதி மன்ற உத்தரவுப்படி ஒரு ஆய்வுக் குழு அமைக்கப் பட்டது. அந்த ஆய்வுக் குழுவிலேயே மெட்ரிக் பள்ளி உரிமையாளர்களை உறுப்பினராக்கியதால் ஆய்வுக் குழுவின் செயல்பாடு ஆரம்ப நிலையி லேயே கேள்விக்குறியானது. இந்நிலையில், இக் குழு சமர்ப்பித்த அறிக்கையும் முரண்பாடுகளின் மூட்டையாகவும் பொதுப்பாடத்திட்டத்தை கை விடும் நோக்கத்தை முதன்மைப்படுத்துவதாக வுமே அமைந்துள்ளது. இவ்வறிக்கை பல கேள் விகளை எழுப்புகிறது.

ஒன்று, முதலில் ‘தரம்’ இல்லை என்று வாதிட் டார்கள். தரத்தை உயர்த்துவதற்கு பதிலாக தாழ்த் துவது சமூக நீதியாகுமா என்றவர்கள் இப்போது பாடம் மெட்ரிக்குலேஷன் தரத்திலிருப்பதால் கிராமப்புற மாணவர்கள் சிரமப்படுவார்கள் என் கிறார்கள். முதலில் சொன்னது உண்மையா? இப்போது சொல்வது உண்மையா?

இரண்டு, கிராமப்புற மாணவர்கள் இந்த பாடத்திட்டத்தை தாங்க மாட்டார்கள் என யார் புகார் செய்தது? யாரிடம் விசாரணை மேற்கொள் ளப்பட்டது? எப்படி இந்த முடிவுக்கு வந்தார்கள்?

மூன்றாவதாக, ஏற்கெனவே நீதிமன்றம் சமச் சீர் கல்வியின் பொதுப்பாடத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டித் திருத்த உத்தர விட்டதா? அல்லது பொதுப்பாடத்திட்ட நூல்கள் வேண்டுமா, வேண்டாமா என்று தீர்ப்பு கூற நிபுணர் குழு அமைக்கச் சொன்னதா?

நாலாவதாக, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக் கங்களைக் கொண்ட அப்பாடநூல்கள் முழுவ தையும் ஒரே வாரத்தில் இந்தக் குழு எப்படி படித்து முடித்தது? ஏதேனும், பொது விசாரணை நடத் தியதா? அல்லது கல்வி வியாபாரிகள் சொல்லு வதை கேட்டு அப்படியே கதை வசனம் எழுதியதா?


ஐந்தாவதாக, அரசு அமைத்த குழுவில் கிராமப்புறத்தில் கல்வி கற்றுக்கொடுத்த அனுபவமோ, திறனோ இல்லாத நிபுணர்களை நியமித்துவிட்டு, கிராமப்புறத்திற்கு உகந்ததல்ல என் பது அறிவு நேர்மையாகுமா?

ஆறாவதாக, அறிவொளி இயக்கம் போன்ற அடித்தட்டு மக்களோடு தொடர்புடையதும் கல்வியில் மிகுந்த அக்கறை கொண்டதுமான அமைப்புகளின் அறிக்கைகளையும் வேண்டு கோள்களையும் தமிழக அரசு படித்துப் பார்த்த தாகக்கூட இந்த அறிக்கையில் காணமுடியவில் லையே ஏன்?

மொத்தத்தில் பெருவாரியான மாணவர்கள் பயிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி களின் சார்பில் நின்று நியாயத்தை நிலைநாட்ட வேண்டிய தமிழக அரசு தடம்மாறி, கல்வி வியா பாரிகளுக்கு துணைபோகக்கூடாது.

மக்களின் அடுக்கடுக்கான நியாயமான கேள்விகளை கருத்தில் கொண்டு, நீதிமன்றம் பொதுப்பாடத்திட்டத்தை இந்த ஆண்டே துவங்க வழி வகை செய்யும் என்று மக்கள் நம்பிக்கை யோடு காத்திருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: