திங்கள், 26 டிசம்பர், 2011

இந்தியா ஜனநாயக நாடாக இருக்க வேண்டுமா அல்லது கம்யூனிச நாடாக இருக்க வேண்டுமா?

கம்யூனிச நாடெனில் அதில் ஜனநாயகம் இருக்குமா?

கம்யூனிச நாட்டில் ஜனநாயகம் இருக்காது என்பது தவறான எண்ணமாகும். கம்யூனிச நிலையை அடைய இன்னமும் வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது. அதற்கு முந்தைய சோசலிச நிலையை எடுத்துக் கொண்டோமென்றால் அதில் முதலாளித்துவ சமூகத்தைக் காட்டிலும் ஆழமான, செறிவான ஜனநாயகம் இருக்கும்.

 முதலாளித்துவ சமூகத்தில் பெயரளவிலான ஜனநாயகம் மட்டுமே இருக்கும். உதாரணமாக, நமது நாட்டில் எடுத்துக் கொண்டோமேயானால் 18 வயது பூர்த்தியடைந்தவுடன் வாக்களிக்கும் ஜனநாயக உரிமை அனைவருக்கும் கிடைத்துள்ளது. ஆனால், எந்த அரசியல் கட்சிக்கு, எத்தகைய கொள்கைகளுக்காக வாக்களிக்க வேண்டு மென்ற புரிதலை ஏற்படுத்தி அந்த ஜனநாயக உரிமையை சரியாகப் பயன்படுத்திட பயிற்றுவிக்காமல் வெறும் வாக்குரிமையை மட்டும் அளிப்பது முழுமையான பலனைத் தராது. 

இன்று முத லாளித்துவ சமூகத்தில் சந்தையில் எல்லாவித மான பொருட்களும் கிடைக்கின்றன. ஆனால், மக்களிடையே வாங்கும் சக்தி இல்லாதபோது சந்தையில் பொருட்கள் கிடைப்பதால் எந்த பயனும் இருக்காது. எனவே, சோசலிச சமூகத்தில் ஜனநாயகம் என்பது உரிமைகளை அளிப்பதுடன் மட்டுமின்றி அவற்றை பயன்படுத்த மக்களை பயிற் றுவிப்பதும் அடங்கியிருக்கும்.

 ஜனநாயகமின்றி எந்தவொரு அரசியலமைப்போ அல்லது கட்சியோ இருக்க முடியாது. எனவே, மக்களுக்கு ஜனநாயக உரிமை என்பது பெயரளவில் மட்டும் கொடுக் கப்படாமல் அவற்றை பயன்படுத்துவதற்கான முழுமையான திறனுடன் கொடுக்கப்படுவதே உண் மையான ஜனநாயகமாக இருக்க முடியும். 

இந்தியாவில் எத்தகைய ஜனநாயக உரிமையை அளிக்க விரும்புகிறோம் என்பதே கேள்வியாகும். ஜனநாயகத்திற்கும் சோசலிசத்திற்கும் எந்த முரண்பாடும் கிடையாது. அத்தகையதொரு நாடாக இந்தியா இருக்கவேண்டுமென்றே நாம் விரும்பு கிறோம். 


                                                                                                                   சீத்தா ராம் யெச்சூரி 

கருத்துகள் இல்லை: