செவ்வாய், 5 ஜூலை, 2011

ஜார்ஜ் புஷ்சையும், பாரக் ஒபாமா வையும் எந்த நீதிமன்றத்தில் நிறுத்துவது?

லிபியாவின் ஜனாதிபதி மும்மர் கடாபியை கைது செய்து கூண்டில் ஏற்றுமாறு சர்வதேச குற் றவியல் நீதிமன்றம் (ஐசிசி) கடந்த வாரம் வெள் ளிக்கிழமை வாரண்ட் பிறப்பித்தது. கடாபியின் மகன் செய்ப் அல் - இஸ்லாம் மற்றும் லிபியா வின் உளவுத்துறை தலைவர் அப்துல்லா அல்- சென்யூசி ஆகியோருக்கும் கைது வாரண்ட் பிறப்பித்தது.

“மனிதநேயத்திற்கு எதிராக கொடிய குற்றங் கள் புரிந்த போர்க்குற்றவாளிகள் இவர்கள்” என்று குற்றம் சாட்டி, வாரண்ட் பிறப்பித்துள்ளது தி ஹேக் நகரில் உள்ள இந்த நீதிமன்றம்.

உண்மையில், தனது நாட்டில் போராட்டத் தில் ஈடுபடும் கிளர்ச்சிக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும், நேட்டோ படைகள் தனது நாட்டை சல்லடை யாக துளைத்து வருவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என் றும் லிபிய ஜனாதிபதி கடாபி வேண்டுகோள் விடுத்த மறுநாளே, அவரை சர்வதேச போர்க்குற்றவாளி என்று மேற்படி நீதிமன்றம் அறிவித்துள்ளது.

லிபியாவின் எண்ணெய் வளத்தை முழுமை யாக கைப்பற்றும் நோக்கத்தோடு, அங்கு ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் கடாபியின் அரசை ஒழித்துக் கட்டும் நோக்கத்தோடு அமெ ரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் அந்நாட்டின் மீது கொடிய யுத்தத்தை நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் அமெரிக்கா வுக்கு இணையாக ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளான பிரிட்டனும், பிரான்சும் நாசகரப் படைகளை அனுப்பி தாக்குதலை தீவிரப்படுத்தி யுள்ளன. இந்தத் தாக்குதல்களில் ஆயிரக்கணக் கானோர் பலியாகியுள்ளனர். அதுகுறித்த உண்மை விபரங்களை உலகிற்கு சொல்லாமல் மேற்கத்திய ஊடகங்கள் மூடி மறைக்கின்றன. கடாபியின் உயிரைப் பறிக்கும் எண்ணத்துடன் அவரது மாளிகையின் மீது தொடர்ந்து நேட்டோ போர் விமானங்கள் சரமாரியாக குண்டு வீசி வருகின்றன. அவரது மகனையும், 3 பேரக் குழந்தைகளையும் சில வாரங்களுக்கு முன்பு குண்டுவீசி கொன்றொழித்தது நேட்டோ படை.

படுகொலைகள் புரிந்து வரும் நேட்டோ படைகளை விட்டுவிட்டு, தாக்குதலுக்கு உள் ளாகியிருக்கும் கடாபியை குற்றவாளி என்று அறிவித்திருப்பதன் மூலம், சர்வதேச குற்ற வியல் நீதிமன்றத்தின் உண்மை முகத்தை அறி யலாம்.

1999ம் ஆண்டு மார்ச் 24ம்தேதி யுகோஸ்லே வியாவில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் படைகளை கொண்ட நேட்டோ ராணுவத்தினர் கொடூரமான யுத் தத்தை துவக்கினர்; அந்நாட்டைத் துண்டாட முயற்சித்த அல்பேனிய தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் வழங்கி, கொசோவா பிரதேசத்தில் ரணகளத்தை ஏற்படுத்தினர்; அதையொட்டி யுள்ள செர்பியாவிலும் குண்டுமழை பொழிந்த னர்; பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் அழிந்தனர். இறுதியில், எந்த யுகோஸ்லேவியா சல்லடையாக துளைக்கப்பட்டதோ, அந்த யுகோஸ்லேவியாவின் ஜனாதிபதி ஸ்லோ போடன் மிலோசெவிக்கை போர்க் குற்றவாளி என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அறி வித்தது. அவர் நாடு கடத்தப்பட்டார். தி ஹேக் நகரிலுள்ள சிறையில் அடைக்கப்பட்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு சிறையிலேயே மர்ம மான முறையில் உயிரிழந்தார்.

தாங்கள் கைப்பற்றத் துடிக்கும் நாடுகளைத் தாக்குவது; அந்த நாடுகளின் தலைவர்களை திட்டமிட்டு போர்க்குற்றவாளி என்று சர்வதேச நீதிமன்றத்தின் பெயரால் அறிவிப்பது; நீதிமன் றமே சொல்லிவிட்டதால் அவரை கைது செய்து தண்டனை கொடுக்க வேண்டுமென்று உலக அளவில் கருத்தை உருவாக்குவது; சம்பந்தப் பட்ட நாடுகளை கபளீகரம் செய்வது என வர லாற்றில் அமெரிக்க - ஐரோப்பிய ஏகாதிபத்தி யங்களின் குற்றங்கள் தொடர்கின்றன.

சில மாதங்களுக்கு முன்பு சூடான் ஜனாதி பதி அல் பஷீருக்கும் இவர்கள் வாரண்ட் பிறப் பித்தார்கள்.

சர்வதேச நீதிமன்றம் என்ற பெயரில் நடை பெறும் இந்த அட்டூழியத்தை சீனா, ரஷ்யா, ஆப்பிரிக்க யூனியன், லத்தீன் அமெரிக்க நாடு கள், மத்திய கிழக்கு நாடுகள் என உலகின் அனைத்துப் பகுதி நாடுகளும் கடுமையாக எதிர்க்கின்றன.

உள்நாட்டில் போராட்டத்தை ஒடுக்கினார் என்ற குற்றச்சாட்டிற்காக கடாபியை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவது சரியென்றால், அண் டை நாடான பாலஸ்தீனத்தில் அனுதினமும் அப்பாவி மக்களை குண்டுவீசிக் கொல்கிறதே அந்த இஸ்ரேலின் பிரதமரை எந்த நீதிமன்றத் தில் நிறுத்துவது?




பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் உல கம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் கொடிய யுத்தங்களை நடத்தி, சுமார் இரண்டேகால் லட் சம் மக்களை அழித்தொழித்த அமெரிக்க ஜனா திபதிகள் ஜார்ஜ் புஷ்சையும், பாரக் ஒபாமா வையும் எந்த நீதிமன்றத்தில் நிறுத்துவது?

6 கருத்துகள்:

ad சொன்னது…

சரியான கேள்வி.ஈராக் ஆப்கானிஸ்தானில் தொடங்கி,... லிபியா வரை போர்க்குற்ரம் நடைபெறுகிறது.அதைக் கேட்க யாருமேயில்லை.
திருடனும் நானே, திருடனைப் பிடிப்பவனும் நானே என்றால் எப்படி உலகம் திருந்தும்.

ad சொன்னது…

சரியான கேள்வி.ஈராக் ஆப்கானிஸ்தானில் தொடங்கி,... லிபியா வரை போர்க்குற்ரம் நடைபெறுகிறது.அதைக் கேட்க யாருமேயில்லை.
திருடனும் நானே, திருடனைப் பிடிப்பவனும் நானே என்றால் எப்படி உலகம் திருந்தும்.

ad சொன்னது…

சரியான கேள்வி.ஈராக் ஆப்கானிஸ்தானில் தொடங்கி,... லிபியா வரை போர்க்குற்ரம் நடைபெறுகிறது.அதைக் கேட்க யாருமேயில்லை.
திருடனும் நானே, திருடனைப் பிடிப்பவனும் நானே என்றால் எப்படி உலகம் திருந்தும்.

விடுதலை சொன்னது…

எஸ்.பி.ஜெ.கேதரன்

உண்மை என்றால் என்ன? சமூகத்தில் நிலவும் மௌனம் மிகவும் கவலை அளிக்கிறது. எல்லாம் தெரிந்தவர்களின் மௌனம் மிகப்பெரிய உயிர் பலி கேட்டும் . தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

kaarkinesan சொன்னது…

etathusaarikalin balam entru ulakil earpatukiratho antru thaan ...... ivarkalai nimirnthu paarthe kelvi keatkamutiyum...........

poril iranthavarkalin kallaraiyil niruththi...... ivarkalai visarikka veantum................

ராஜ நடராஜன் சொன்னது…

கேபிடலிஸத்துக்கும்,நேட்டோவுக்கும் மாற்று சக்தியாக ரஷ்யா இருந்தது போன்ற் சூழ்நிலை மாறிய போதும் கம்யூனிசத்தின் வேர்களைக் கொண்ட ரஷ்யாவும்,சீனாவும்,கியூபாவும் ஒன்றும் பீத்திக்கிற மாதிரியும் இல்லை.இருப்பதில் கேபிடலிஸமே பரவாயில்லைங்கிற மாதிரியான சுழ்நிலைதான் இருக்குது.

கடாபிக்கெல்லாம் வக்காலத்து வாங்கிறீங்களே!எகிப்திலும்,துனிசியாவிலும் மக்கள் கிளர்ந்தெழுந்தது மாதிரி லிபியாவிலும் மக்கள் புரட்சி வெடிக்கும் போதே கடாபி சுதாரிக்கொண்டு பதவி விலகியிருக்க வேண்டும்.மாறாக லிபியா எகிப்தல்ல என்ற் மக்கள் அடக்கு முறையும்,அழிவுகளுக்குப் பின்னால் Safe passage கொடுத்தால் பதவி விலகுகிறேன் என்பது காலம் கடந்த செயல்.

அமெரிக்காவின் இரட்டை நிலைக் கொள்கை உலகம் அறிந்ததே.ஆனால் பூனைக்கு மணி கட்டுவதற்கு யார் இருக்கிறார்கள் என்ற வெற்றிடமே தோன்றுவதால் அமெரிக்காவின் கட்டப்பஞ்சாயத்து தொடர்கிறது.